ஜெயலலிதா பிறந்தநாளில் அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் வீட்டில் தீபம் ஏற்றுங்கள்.. ஓபிஎஸ், ஈபிஎஸ் வேண்டுகோள்.!

ஜெயலலிதா பிறந்தநாளில் அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் வீட்டில் தீபம் ஏற்றுங்கள்.. ஓபிஎஸ், ஈபிஎஸ் வேண்டுகோள்.!

Update: 2021-02-22 13:46 GMT

பிப்ரவரி 24ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் வருகிறது. அவரது பிறந்த நாளில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைமை கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாள் பிப்ரவரி 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஏற்கெனவே ஜெயலலிதாவின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி ஜெயலலிதாவின் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்துவார்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு வருகின்ற 24ம் தேதி மாலை 6 மணிக்கு அதிமுகவினர் ஒவ்வொருத்தரின் இல்லங்களிலும் விளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.

இந்த பொன்னாளன்று நீங்கள் ஒவ்வொருவரும் “என் இல்லம் அம்மாவின் இல்லம்” என்று உளமார நினைத்துக் கொண்டு, உங்கள் வீடுகளில் சரியாக மாலை 6 மணிக்கு தீபம் ஒன்றினைந்து ஏற்றுங்கள். கண்களை மூடியவாறு உள்நோக்கி பார்த்து நம் ஒப்பற்ற தலைவியின் புனித ஆத்மாவிடம் பிரார்த்தனை செய்து, “உயிர் மூச்சு உள்ளவரை அம்மாவின் வழியில் மக்களையும், மக்களுக்கான இந்த அதிமுகவையும் காப்பேன். இது அம்மா மீது ஆணை என்று கூறுங்கள். இந்த உறுதிமொழியை எங்களுடன் இணைந்து எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். என்று குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது இந்த கடிதம் அதிமுகவினர் அதிகளவில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு, ஷேர் செய்தும் வருகின்றனர்.

Similar News