விழுப்புரத்தில் 28ம் தேதி அ.தி.மு.க. சார்பில் பிரமாண்ட மாநாடு.. கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு.!

விழுப்புரத்தில் 28ம் தேதி அ.தி.மு.க. சார்பில் பிரமாண்ட மாநாடு.. கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு.!

Update: 2021-02-18 17:38 GMT

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் விழுப்புரத்தில் மிக பிரமாண்டமான முறையில் மாநாடு நடத்த வருகின்ற 28ம் தேதி திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதி, தமாகா, ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி பேச்சு வார்த்தையும் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதே போன்று தொகுதி பங்கீடுகளும் விரைவில் முடிந்து விடும். தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னர் வேட்பாளர்களை அறிவிக்கவும் வாய்ப்புள்ளது.

இந்நிலையில், தேர்தலுக்கு முன்னதாக அதிமுக மிக பிரமாண்டமான முறையில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னர் மறைந்த ஜெயலலிதாவும் நெல்லையில் மிகப்பெரிய மாநாட்டை நடத்தினார். அதன் பின்னர் எளிதில் ஆட்சியை பிடித்த வரலாறும் உண்டு. அதே போன்று தற்போதைய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரும் பிரமாண்டமான முறையில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அந்த வகையில் இந்த மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் வருகின்ற 28ம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கூடுவார்கள் என சொல்லப்படுகிறது. இந்த பணிகளை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னின்று நடத்தி வருகிறார்.
 

Similar News