கொரோனா நிவாரணத்திற்கு அ.தி.மு.க. ஒரு கோடி நிதியுதவி.!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையால் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் மற்றும் வெண்டிலேட்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் தங்களால் முடிந்த உதவிகளை தமிழக அரசுக்கு அளித்து உதவுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினர் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பணம் அளித்து வருகின்றனர். அதே போன்று இன்று அதிமுக தலைமை ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளது.
இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் அளிக்கப்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.