தடையை மீறி அ.தி.மு.க. கொடி கட்டிய காரில் வரும் சசிகலா.. ஓசூர் எல்லையில் குவிக்கப்பட்ட ஆயிரம் போலீசார்.!

தடையை மீறி அ.தி.மு.க. கொடி கட்டிய காரில் வரும் சசிகலா.. ஓசூர் எல்லையில் குவிக்கப்பட்ட ஆயிரம் போலீசார்.!

Update: 2021-02-08 08:11 GMT

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27ம் தேதி விடுதலையானார். இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக தன்னை ஒரு வாரமாக தனிமைப்படுத்திக்கொண்ட சசிகலா பெங்களூரு அருகே உள்ள தேவனஹள்ளியில் தங்கியிருந்தார். அப்போது மருத்துவமனையில் இருந்து ரிசார்ட் செல்லும்போது தனது காரில் அதிமுக கொடியை கட்டியிருந்தார்.

இந்த சம்பவத்திற்கு அதிமுக அமைச்சர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தியது சட்டத்திற்கு புறம்பனாது. கட்சியில் இல்லாத ஒருவர் எப்படி கொடியை பயன்படுத்தலாம் என்று அமைச்சர்கள் அளித்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெங்களூருவில் இருந்து புறப்பட்ட சசிகலா மீண்டும் அதிமுக கொடி கட்டிய காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். ஏற்கெனவே அதிமுக அமைச்சர்கள் நிர்வாகிகள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதால், தடையை மீறி அதிமுக கொடியை கட்டிக்கொண்டு வருகின்ற சம்பவம் அதிமுக தொண்டர்களிடையே பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.

இதன் காரணமாக தமிழக எல்லையான ஓசூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அநேகமாக சசிகலாவை கைது செய்து போலீஸ் வாகனத்தில் அழைத்து வரலாம் என்று கூறப்படுகிறது. அதிமுக கொடியுடன் சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று உளவுத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் ஓசூர் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
 

Similar News