"2021 தேர்தலில் என்னுடைய பங்கும் இருக்கும்" - தி.மு.க தூக்கம் கெடுக்கும் அஞ்சா நெஞ்சன் மு.க.அழகிரி!

"2021 தேர்தலில் என்னுடைய பங்கும் இருக்கும்" - தி.மு.க தூக்கம் கெடுக்கும் அஞ்சா நெஞ்சன் மு.க.அழகிரி!

Update: 2020-12-01 19:03 GMT
மதுரையில் நடந்த சந்திப்பு மற்றும் ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்ததைத் தொடர்ந்து, மு.க.அழகிரி 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 'நிச்சயமாக' ஒரு பகுதியாக இருப்பேன் என்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி புதிய கட்சி தொடங்க இருப்பதாக வெளியான வதந்திகள் குறித்து பேசினார். இது குறித்த தகவல் விரைவில் தெரியவரும் என்று கூறினார். முன்னதாக, தி.மு.க-விலிருந்து வெளியேற்றப்பட்ட அழகிரி பா.ஜ.க-வில் சேருவதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

முன்னதாக, அழகிரி  2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஒரு புதிய கட்சியை உருவாக்குவது குறித்து பல வதந்திகள் வந்தன. இந்த ஊகங்களைப் பற்றி கேட்டபோது, ​​அனைத்து வதந்திகளையும் திட்டவட்டமாக மறுத்தார். அதேபோல் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினார். அவர் தனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசிப்பதாகவும், அப்படி ஒரு யோசனை ஒன்று இருந்தால் புதிய கட்சி அமைப்பதை அறிவிப்பதாகவும் கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நவம்பரில் சென்னைக்கு வரவிருந்த நேரத்தில், பா.ஜ.க-வின் மூத்த தலைவர் ஒருவர் நவம்பர் 21 அன்று அமித் ஷா மற்றும் அழகிரி இடையே ஒரு சந்திப்பு நடக்க வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டார். பா.ஜ.க-வுக்கும் அழகிரிக்கும் இடையிலான ஒரு கூட்டணி குறித்து ஊடகங்கள் கேட்ட கேள்விக்கு, தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன், இது பற்றியும் தனக்குத் தெரியாது என்றாலும், அழகிரி பா.ஜ.க-வில் சேர விரும்பினால் அவரை வரவேற்க கட்சி தயாராக உள்ளது என்று கூறியிருந்தார்.

மறுபுறம், முன்னாள் தி.மு.க எம்.பி.யும், அழகிரியின் தீவிர ஆதரவாளருமான கே.பி.ராமலிங்கம் தி.மு.க-வை விட்டு வெளியேறி, "மு.க.ஸ்டாலின் தலைமையிலான கட்சி எம் கருணாநிதியின் காலத்தில் இருந்ததைப் போலவே இல்லை" என்று கூறி பா.ஜ.க-வில் இணைந்தார். பா.ஜ.க-வில் இணைந்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய ராமலிங்கம் "மு.க.அழகிரியுடன் தனக்கு நல்ல உறவு இருப்பதாகவும், அவர் கட்சியில் சேர முயற்சிப்பதாகவும்" கூறினார்.

Similar News