அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம்?
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் அவரின் நண்பர்களின் வீடு உள்ளிட்ட இடங்களில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையை தொடர்ந்து நேற்று இரவு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருடன் எஸ்.பி.வேலுமணி சென்னை, கிரின்வேஸ் சாலையில் சந்தித்து பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், சி.விஜயபாஸ்கர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பின்போது லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியதற்கு அதிமுக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே எஸ்.பி.வேலுமணி வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற வகையில், தமிழகம் முழுவதும் அதிமுக போராட்டம் நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Source: Puthiyathalamurai
Image Courtesy:Puthiyathalimurai
https://www.puthiyathalaimurai.com/newsview/112575/Directorate-of-Vigilance-and-Anti-Corruption-raid--s-p-velumani-discuss-with-OPS-and-EPS