'எல்லாம் உதயநிதி ராசியோ! ராசி' - உதயநிதியை பங்கமாக்கிய செல்லூர் ராஜு
'உதயநிதி செங்கல் தூக்கி காண்பித்த நேரம் செங்கல், ஜல்லி விலைகள் உயர்ந்துவிட்டது' என அ.தி.மு.க'வின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
'உதயநிதி செங்கல் தூக்கி காண்பித்த நேரம் செங்கல், ஜல்லி விலைகள் உயர்ந்துவிட்டது' என அ.தி.மு.க'வின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க'வின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது, தி,மு.க வாக்குறுதிகளை கொடுத்து வாக்குகளை வாங்கிவிட்டு மக்களை ஏமாற்றவிட்டனர், மின் கட்டணத்தை தி.மு.க அரசு உயர்த்தி மக்களை வாட்டுகிறது.
ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து எனக் கூறிய தற்போது மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கிறது, தி.மு.க உதயநிதி செங்கலை தூக்கி காண்பித்த நேரம் செங்கல் விலை உயர்ந்துவிட்டது, உதயநிதி ராசி அப்படி என செல்லூர் ராஜு கூறினார்.