நான் குறுக்கு வழி முதல்வரா? அப்போ 1969ல் கருணாநிதி வந்தது மட்டும் நேர்வழியா? சந்தி சிரிக்கும் தி.மு.க வரலாறு!

நான் குறுக்கு வழி முதல்வரா? அப்போ 1969ல் கருணாநிதி வந்தது மட்டும் நேர்வழியா? சந்தி சிரிக்கும் தி.மு.க வரலாறு!

Update: 2021-01-21 08:08 GMT

நான் குறுக்குவழியில் முதல்வரானேன் என்றால் உங்கள் தந்தை கருணாநிதியும் நேரடியாக முதல்வராக ஆகவில்லை. மக்கள் அண்ணாவுக்கு தான் ஒட்டு போட்டார்கள், கருணாநிதிக்கு அல்ல, ஸ்டாலினின் தந்தை எப்படி முதல்வர் ஆனாரே அதேபோல் தான் நானும் முதல்வர் ஆனேன் என முதல்வர் பழனிசாமி பேசினார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தான் முதல்வரை தேர்ந்தெடுக்க முடியும். பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் எந்த கட்சிக்கு கிடைக்கிறதோ அந்த கட்சி தான் சட்டமன்றக் கட்சி தலைவரை தேர்ந்தெடுத்து முதல்வராக முடியும். நேரடியாக யாரும் மக்கள் ஒட்டு போட்டு முதல்வர் ஆக முடியாது என்பதை ஸ்டாலினுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். அதுதான் நம்முடைய சட்டமுறை.

அண்ணா பிறந்த மாவட்டம் இந்த காஞ்சிபுரம் மாவட்டம். அண்ணா தனது உழைப்பால் முதல்வராகி துரதிஷ்டவசமாக மறைந்து விட்டார். அப்பொழுது கருணாநிதி சூழ்ச்சி செய்து முதல்வராக வந்தார். அவர் நேரடியாக முதல்வராக ஆகவில்லை. மக்கள் அண்ணாவுக்கு தான் ஒட்டு போட்டார்கள். தமிழகத்தை ஆளக்கூடிய தகுதி அண்ணாவுக்கு இருக்கிறது என்பதால் தான் மக்கள் அவர் முதல்வராக வேண்டும் என்று வாக்களித்தார்கள்.

கருணாநிதிக்கு அல்ல. இவருடைய தந்தை எப்படி முதல்வர் ஆனாரே அதேபோல் தான் எடப்பாடி பழனிசாமியும் முதல்வர் ஆனார். நான் ஊர்ந்து ஊர்ந்து வந்து முதல்வர் ஆனேன் என்று ஸ்டாலின் சொல்கிறார். அவருடைய அப்பா எட்டிக்குதித்து வந்தா முதல்வர் ஆனார். கவிஞர் கண்ணதாசன் தனது சுயசரிதையில் கருணாநிதி எப்படி ரெயிலில் வந்தார் என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார். நான் அப்படி வரவில்லை.

நான் விவசாய குடும்பத்திலே பிறந்தவன். இன்றைக்கும் விவசாயம் செய்து கொண்டிருக்கின்றேன். ஆகவே, நான் வந்த வழி நேர்வழி. நீங்கள் வந்த வழி குறுக்கு வழி. அதனால் தான் உங்களுக்கு குறுக்கு புத்தி இருக்கிறது. கட்சியை உடைக்க வேண்டும் என்கிறார், ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்கிறார் என முதல்வர் பேசியுள்ளார்.

Similar News