அண்ணல் அம்பேத்கரை மதிக்காமல், அராஜகம் செய்பவர்கள் வி.சி.க.வினர்: அண்ணாமலை கடும் தாக்கு!

Update: 2022-04-15 02:25 GMT

அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றபோது பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது விசிகவினர் அத்துமீறி கற்களை வீசி காட்டுமிராண்டித்தனமாக தாக்கினர். இந்த சம்பவத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்று அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள கோயம்பேடு தேர்தல் அலுவலகம் எதிரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்தனர். அதே போன்று பாஜக மற்றும் விசிகவினர் ஒன்றாக கூடினர். அப்போது விசிக எம்.பி., திருமாவளவன் வந்தபோது அக்கட்சியை சேர்ந்தவர்கள் அத்துமீறி அங்கிருந்த பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது கற்களை வீசி அராஜகத்தில் ஈடுபட்டனர். இதில் பலர் பாஜக தொண்டர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இன்று அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற பாஜக தொண்டர்களை, விசிக கட்சியினர் கல் வீசி காட்டுமிராண்டித்தனமாக தாக்கினர். அன்பை போதித்த அம்பேத்கர் அவர்களின் உண்மையான அரசியல் வாரிசாக பாஜகவினர் அமைதி காத்தனர். நியாயம் காக்க, காயம் பட்டு, சிகிச்சையில் எம் தொண்டர்கள்! வன்முறைக்கு எப்பொழுதும் வன்முறை தீர்வாகாது என்பதை முழுமையாக உணர்ந்தவர்கள் பாஜக கட்சியின் தொண்டர்கள். அண்ணலை மதிக்காது, அராஜகம் செய்பவர்கள், அன்பின் வழி, எங்களுடன் இணைந்து செயல்பட, மனந்திருந்தி வருவார்கள் என்கின்ற நம்பிக்கையுடன்! இவ்வாறு அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News