மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேளாண் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளதாக விவசாயிகள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு அறிவித்த 3 வேளாண் சட்டங்களால், விவசாயத் துறைக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்த விவசாயிகள் அந்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என கடந்த ஓராண்டாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாட்டின் பாதுகாப்பு கருதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்து கடந்த நவம்பர் மாதம் அறிவித்தது. இந்த சட்டங்கள் ரத்து செய்வதற்கான மசோதாவும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெறவில்லை.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேளாண் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளதாக விவசாயிகள் சங்கம் சார்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாய சங்கத் தலைவர் யுத்வீர் சிங் கூறியதாவது, "மத்திய அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு அழைப்பு விடுத்தார். சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், தற்போது நிலவி வரும் போராட்டத்திற்கு தீர்வு காண்பதில் அரசு தீவிரம் காட்டி வருவதாகவும் அவர் கூறினார். உள்துறை அமைச்சர் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த குழுவை இப்போது உருவாக்கியுள்ளோம்" என தெரிவித்துள்ளார்.