இமாச்சல் பிரதேசத்திற்கு சென்ற மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனுக்கு உற்சாக வரவேற்பு.!

இமாச்சல் பிரதேசத்திற்கு சென்ற மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனுக்கு உற்சாக வரவேற்பு.!

Update: 2020-12-02 14:34 GMT

தேசிய மகளிரணித் தலைவியாக தேர்வு செய்யப்பட்டுள்ள வானதி சீனிவாசன் முதன் முறையாக தனது அரசியல் பயணத்தை வடக்கில் இருந்து தொடங்கியுள்ளார்.


1993ம் ஆண்டு பாஜக கட்சியில் இணைந்த வானதி சீனிவாசன், அக்கட்சியின் பல்வேறு பொறுப்புகள் வகித்து வருகிறார். இவர் தேசிய செயற் குழு உறுப்பினர், தமிழக பாஜகவின் துணைத் தலைவர், துணைபொதுச்செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர்கள். இவருக்கு சமீபத்தில் பாஜக மகளிரணியின் அகில இந்திய தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டது. இதனால் தேசிய அளவில் தமிழகத்தை சேர்ந்த பெண் அரசியல் பிரமுகருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது பலரின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.


இந்நிலையில் இமாச்சல் பிரதேசத்தில் வானதி சீனிவாசன் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அங்கு சென்ற அவருக்கு அம்மாநில பாஜக தலைவர் யுவ மோர்ச்சா சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பை அளித்தார். வானதி சீனிவாசனும் இமாச்சல் பிரதேசத்தின் பாரம்பரிய உடை அணிந்து வித்தியாசமாக தோன்றினார். இதனையடுத்து அங்கு வானதி சீனிவாசன் செய்தியாளர்களையும் சந்தித்துள்ளார். இதற்கான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News