புதுச்சேரி பா.ஜ.க. கூட்டணி அரசை காப்பி அடிக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ்.!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2021-07-13 06:33 GMT

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை அதிகரித்து வந்த நிலையில், படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகிறது. 


அதே போன்று ஜூலை 16ம் தேதி முதல் புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்தது. கொரோனா தொற்று குறைந்து வரும் சூழ்நிலையில், 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 16ம் தேதி முதல் வகுப்புகள் நடைபெறும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதனிடையே தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற கேள்விகள் பெற்றோர்கள் மத்தியில் எழுந்தது.


இந்நிலையில், திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, புதுச்சேரியில் அறிவிக்கப்பட்டது போன்று தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பது பற்றி ஆய்வு செய்து முதலமைச்சருக்கு அறிக்கை அளிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

பள்ளிகள் திறப்பது கூட அடுத்த மாநிலத்தை பார்த்துதான் திறக்க வேண்டுமா என பலர் கேள்வி எழுப்புகின்றனர். புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக ரங்கசாமி பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News