ராசாவின் பேச்சை ஸ்டாலின் ஆதரிப்பதாலேயே கட்சியை விட்டு நீக்கவில்லை.. அன்புமணி ராமதாஸ்.!

இதுவே நம்ம கட்சியில் யாராவது பேசி இருந்தா இந்நேரத்திற்கு அடிப்படை உறுப்பினர் மட்டுமின்றி, உதைத்து அனுப்பி இருப்போம். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.

Update: 2021-03-29 05:14 GMT

பாகம இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அரியலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தாமரை எஸ்.ராஜேந்திரனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:- வருகின்ற தேர்தல் மிக முக்கியமானது. நாங்கள் அமைத்துள்ள கூட்டணி சமூகநீதி அடிப்படையிலேயே சேர்ந்து இருக்கின்றோம். நமது அணியில் 70 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு விவசாயி தமிழகத்தின் முதலமைச்சராக வந்துள்ளார். அவர் மீண்டும் முதலமைச்சராக தொடர வேண்டும்.




 


எனவே அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

மேலும், அன்புமணி ராமதாஸ் பேசும்போது, திமுக கொள்கை பரப்பு செயலாளர் ராசா, தற்போது எம்.பி., முன்னாள் மத்திய அமைச்சர், தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தாயாரை பற்றி மிகவும் கொச்சையாக பேசியுள்ளார். இதனை ஒருபோதும் மன்னிக்க முடியாது.


 



ஒரு தாயை மிகவும் கொச்சையாக பேசிய ராசாவை அவங்க கட்சித் தலைவர் இதுவரை கண்டிக்கவில்லை. இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் ஸ்டாலினுக்கு பெண்களை பற்றியோ, தாயை பற்றியோ எந்த ஒரு மதிப்பும் மரியாதையும் கிடையாது.


 



இதுவே நம்ம கட்சியில் யாராவது பேசி இருந்தா இந்நேரத்திற்கு அடிப்படை உறுப்பினர் மட்டுமின்றி, உதைத்து அனுப்பி இருப்போம். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.

Similar News