ஆர்.டி.ஓ. மீது வேன் மோதியது விபத்தா அல்லது கொலையா? தி.மு.க. அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி!

கரூரில் வாகன சோதனையில் இருந்த வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் மீது வேன் ஒன்று மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஏற்கனவே சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் என்பவரை ஆடு திருடும் கும்பல் வெட்டிபடு கொலை செய்தது. தற்போது வாகன ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-11-22 10:28 GMT

இந்நிலையில், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கரூரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் மீது வேன் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றதில் அவர் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் மீது வேன் மோதியது விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். மேலும், திருச்சி அருகே ஆடு திருடர்களைப் பிடிக்கச் சென்ற காவல் அதிகாரி பூமிநாதன் வெட்டிக் கொல்லப்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பே அடுத்த நிகழ்வு நடந்திருப்பது கவலையளிக்கிறது. ஆபத்தான சூழலில் பணியாற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Anumani Ramadoss

Tags:    

Similar News