திருப்பூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல விடுதியிலுள்ள சமையல்காரர்களை, தனது வீட்டில் தங்கி காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை வேலை செய்ய அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பணி கொடுத்திருப்பதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜுக்கு எதிராக, ஒரு பகீர் குற்றச்சாட்டை, தனது ட்விட்டர் பக்கத்தில் சுமத்தியிருக்கிறார். 'திருப்பூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல விடுதியிலுள்ள சமையல்காரர்களை, தனது வீட்டில் தங்கி காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை வேலை செய்ய அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பணி கொடுத்திருப்பதாக, அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். அதோடு, 'காற்றில் பறந்தது சமூகநீதி!. மக்கள் வரிப்பணத்தில் அநீதி! திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிடர் நல விடுதியிலுள்ள சமையல்காரர்களை, தன் வீட்டு வேலைக்காரர்களாக ஏன் பணியமர்த்த வேண்டும்? ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்களே...' என்று ட்வீட் செய்ததோடு, சமையல்காரர்களின் பெயர்ப் பட்டியலையும் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
இந்த விவகாரம், சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாற, ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜும், தனது ட்விட்டர் பக்கத்தில், 'திரு அண்ணாமலை அவர்கள், எங்கள் வீட்டு சமையலுக்கு நான் எங்கள் துறை விடுதியின் சமையலர்களை பயன்படுத்திவருவதாக அபாண்டமாகப் பொய் சொல்லியுள்ளார். எங்கள் வீட்டு சமையலுக்கு இரு சமையலர்களை சம்பளத்துக்குப் பணியில் அமர்த்தியுள்ளேன். அவர் வெளியிட்டிருக்கும் பட்டியலுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை' என்று ட்வீட் மூலம், பதில் கூறியிருக்கிறார்.
சமீப காலமாக தி.மு.க அமைச்சர்கள் அண்ணாமலையின் கிடுக்கிப்பிடி கேள்விகளால் பதில் கூற முடியாமல் தவித்து வருகின்றனர்.