மாவட்ட அளவில் புதிய நிர்வாகிகள் ! - அதிரடியாக கட்சியை அடுத்த கட்டத்திற்கு பலப்படுத்தும் அண்ணாமலை !
புதிதாக வேகம் மிக்கவர்களை மாவட்ட செயலாளர்களாக களம் இறக்கி பா.ஜ.க'வை தமிழகத்தின் பிரதான கட்சியாக முழு வீச்சில் செயல்பட வைக்க பா.ஜ.க தலைவர் அண்ணாமலை திட்டமிட்டுள்ளார்.
நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று தெரிகிறது. இந்தத் தேர்தல்களில் கட்சியின் சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள், நவம்பர் 7-ம் தேதி முதல், 15-ம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம் என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிவித்திருக்கிறார். மேலும் கட்சியை தி.மு.க-வுக்கு மாற்றான, பிரதான எதிர்க்கட்சியாக களத்தில் வேகம்காட்ட முடிவெடுத்திருக்கிறது பா.ஜ.க தலைமை. அதன் காரணமாக தலைமையின் வேகத்துக்கு ஈடுகொடுப்பதுபோல, மாவட்ட அளவில் பல புதிய நிர்வாகிகளை நியமிக்கவும், செயல்பாடு அதிகம் கொண்டவர்களை பதவிகளில் அமர்த்தவும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தி.மு.க'வை எதிர்த்து களத்தில் சித்தாந்தரீதியாகவும், மாவட்ட அளவில் தி.மு.க நிறைவேற்றாத வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் இந்த மாவட்டத் தலைவர்கள் போராட்டம் நடத்துவார்கள். அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஓர் ஆக்கபூர்வமான எதிர்கட்சியாக பா.ஜ.க செயல்படவிருக்கிறது. இதன் காரணமாக மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் மாற்றம் இருக்கலாம் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.