அண்ணாமலை விட்ட டோஸ்! அரக்கப் பறக்க வெளியான டெண்டர் விவகாரம் - கடைசியில் கவிழ்ந்தே விட்டாங்கய்யா!

Update: 2022-06-17 10:07 GMT

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணிகளுக்கு, ஊட்டச்சத்து மாவு, ஆவின் நெய், பேரீச்சம்பழம், இரும்பு சத்து டானிக் உள்பட 8 பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது.

இதனை கொள்முதல் செய்வதற்காக தமிழக அரசு விடுத்த டெண்டரில் முறைகேடு நடந்ததாக தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை குற்றம் சாட்டினார். மேலும், ஊட்டச்சத்து பெட்டகங்களில் உள்ள எல்லா பொருட்களையும் சப்ளை செய்வதற்கான டெண்டரில் விதிமுறைகளை மீறி 'அனிதா டெக்ஸ்காட்' என்ற தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட உள்ளதாக அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

அண்ணாமலை புகாரை தொடர்ந்து, அனிதா டெக்ஸ்காட் என்ற நிறுவனத்திற்கு பதிலாக வேறு நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீ பாலாஜி சர்ஜிக்கல்ஸ் என்ற நிறுவனம், ஊட்டச்சத்து பெட்டகத்தில் அடங்கிய 8 பொருட்களை சப்ளை செய்வதற்கான டெண்டரை பெற்றிருக்கிறது. 

தொடர்ச்சியாக அண்ணாமலை முன்வைத்த குற்றச்சாட்டை தொடர்ந்து, டெண்டர் அறிவிப்பு வெளியாகும் முன்னரே நிறுவனம் மாற்றப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

Input From: Dailythanthi





Similar News