234 தொகுதிகளிலும் பாதயாத்திரை - தமிழக அரசியலை புரட்டிப்போட தயாராகும் அண்ணாமலை
234 தொகுதிகளிலும் பாதயாத்திரை சென்று தமிழக அரசியலில் பெரும் எழுச்சியை ஏற்படுத்த இருக்கிறார் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை.
தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை அவர்கள் 2023 ஆம் ஆண்டு அதிரடி அரசியலில் களம் இறங்கி பல்வேறு களப்பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். குறிப்பாக அதிரடி அரசியல் நடத்த வேண்டும் என்பதிலும் தீவிரமாக களம் இறங்கி உள்ளார். என்னென்ன பணிகளை செய்ய வேண்டும் என்றும், தற்போது தீவிரமாக பட்டியலிடப்பட்டு இருக்கிறார். அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தொட்டு செல்லும் வகையில் பாதயாத்திரை நடத்த அண்ணன் அண்ணாமலை அவர்கள் முடிவு செய்து இருக்கிறார்.
மேலும் இந்த பாதயாத்திரை பயணத்தின் போது, மக்களின் பிரச்சினைகளை நேரில் கண்டு அவர்களின் குறைகளை தீர்க்க பா.ஜ.க சார்பில் சரியான முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார். இந்த பாதயாத்திரை பயணம் பாதை வடிவமைக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசியலில் மிகப்பெரும் எழுச்சியை ஏற்படுத்தும் வகையிலும், இளைஞர்களுக்கு ஒரு புதிய உத்வேகம் கொடுக்கும் வகையிலும் பாதயாத்திரை அமையும் என்றும் பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர்கள் இதை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பாதயாத்திரை நிறைவுபெறும் சமயத்தில் தமிழகத்தில் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று அண்ணாமலை தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டு இருக்கிறது. 234 தொகுதிகளில் உள்ள மக்களை நேரடியாக சந்திப்பதற்கு தனக்கு கிடைத்த ஒரு பெரிய வாய்ப்பாகவும் அண்ணாமலை இதை பார்க்கிறார் என்று கூறப்படுகிறது.
Input & Image courtesy: Maalaimalar