போலீசார் அனுமதி கொடுக்கா விட்டாலும் திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம்: அண்ணாமலை அறிவிப்பு!

போலீசார் அனுமதி கொடுக்காவிட்டாலும் கோவையில் திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் - அண்ணாமலை

Update: 2022-09-26 08:34 GMT

கோவையில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதனை கண்டித்து பா.ஜ.க சார்பில் இன்று அதாவது திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்தார். மேலும் இது பற்றி அவர் கூறுகையில், தமிழகத்தில் வன்முறை மற்றும் சட்ட ஒழுங்கு சீர்குலையும் நிகழ்ச்சி செய்பவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று DGP அறிவித்துள்ளார்.


அதை நான் வரவேற்கிறேன். அமைதி பூங்காவாக இருந்து தமிழகம் கடந்த 15 மாதங்களாக மாறிவிட்டது. PSI அலுவலகங்களில் நடந்த சோதனைக்கு பின்னர் அது உச்சத்தை எட்டி உள்ளது. காவல்துறையினில் கைகள் கட்டப்பட்டுள்ளன அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. தமிழகத்தில் தற்போது நடந்துள்ள பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் போலீசார் கண்டறிந்து உடனடியாக கைது செய்ய வேண்டும். பா.ஜ.க தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். நம் கொடுக்கும் நிர்பந்தத்தால் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பாதிக்கப்பட்ட நபர்களின் சொத்துக்களுக்கு நஷ்ட ஈடு வாங்கி கொடுக்க முயற்சி எடுப்போம்.


தமிழகத்தில் பா.ஜ.கவின் வளர்ச்சி யாராலும் சீர்குலைக்க முடியாது. எங்கள் பேச்சும் அமைதியும் ஒரு எல்லை வரைதான் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்தால் தொண்டர்களின் கோபத்திற்கு மாநில அரசு ஆளாக நேரிடும். ஒரு பக்கம் இயக்கம், பயங்கரவாத கொள்கை மூலம் தான் வளர முடியும் என்று நினைத்தால் அதற்கு தமிழக மண்ணில் இடமில்லை. யாரெல்லாம் தவறு செய்வார் என்று போலீசாருக்கு நன்றாக தெரியும். அவர்களின் முன்னெச்சரிக்கைக்காக கைது செய்ய வேண்டும். இன்று திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News