பயிர் காப்பீடுக்கான அவகாசத்தை மத்திய அரசு நீட்டிக்கும்: பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை!
தமிழகத்தில் மழையால் டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் அனைத்து வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் பயிர் காப்பீட்டை மத்திய அரசு அறிமுகம் செய்திருந்தது.
தமிழகத்தில் மழையால் டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் அனைத்து வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் பயிர் காப்பீட்டை மத்திய அரசு அறிமுகம் செய்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் அனைத்தும் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கண்ணீர் துடைக்கின்ற வகையில் பயிர் காப்பீடுக்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டிக்கும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
பாஜக மாவட்டத் தேர்தல் பணிகள் பற்றி தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி, சுதாகர் ரெட்டி உள்ளிட்டோருடன் பாஜக தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே அவர்களின் கோரிக்கைக்கு இனங்க மத்திய அரசு விவசாயிகள் நலனுக்காக அதனை முறைப்படி நீட்டிக்கும் என்றார். அண்ணாமலை அறிவிப்பால் விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். விரைவில் பயிர் காப்பீட்டால் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
Source, Image Courtesy: Puthiyathalamurai