டெல்லியில் தி.மு.க. அரசு ரூ.200 கோடியில் தங்கும் விடுதி கட்டலாம்: ஆனால் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை எதிர்க்கும்! இரட்டை நிலைபாட்டை தோலுரித்த அண்ணாமலை!

டெல்லியில் பழைய பாராளுமன்றத்தில் போதுமான இடவசதி இல்லாத காரணத்தினால் அருகாமையிலேயே புதிய பாராளுமன்ற கட்டடம் ரூ.900 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு தமிழகத்தில் உள்ள திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்களின் வெத்து விளம்பரத்திற்காக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

Update: 2021-10-14 02:15 GMT

டெல்லியில் பழைய பாராளுமன்றத்தில் போதுமான இடவசதி இல்லாத காரணத்தினால் அருகாமையிலேயே புதிய பாராளுமன்ற கட்டடம் ரூ.900 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு தமிழகத்தில் உள்ள திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்களின் வெத்து விளம்பரத்திற்காக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

தற்போது அவர்களின் இரட்டை நிலைப்பாடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது திமுக அரசு டெல்லியில் ரூ.200 கோடி செலவில் புதியதாக தமிழ்நாடு பவன் தங்கும் விடுதி கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளதாம்.

இது குறித்து தமிழக பாஜக தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: திமுக அரசு ரூ.200 கோடி செலவில் டெல்லியில் புதிய தமிழ்நாடு பவன் தங்கும் விடுதி கட்டத் திட்டமிடுகிறது. அதே ரூ.900 கோடி செலவில் கட்டப்படும் மிக அவசியமான புதிய பாராளுமன்ற கட்டிடத்தை எதிர்க்கிறது. என்ன சொல்ல இரட்டை நிலைப்பாடும், வெளிப்படையான பொய்களும் திமுகவின் அடையாளம் என குறிப்பிட்டுள்ளார்.

Source,Image Courtesy: Bjp Tn Predident Twiter

Tags:    

Similar News