நீட் பற்றி தி.மு.க. கூறும் பொய்யை உடைப்போம்: பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

Update: 2022-02-08 11:05 GMT

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது: நீட் தேர்வு விவகாரத்தில் திமுக மாணவர்களுடைய நலன்களை விரும்பவில்லை. பொய்யான தகவல்களை மக்களிடம் சொல்லி ஏமாற்றி வருகிறது. கடந்த ஆண்டு 14,618 மாணவர்கள் நீட் கோச்சிங் செல்லாமலேயே தேர்ச்சி அடைந்துள்ளனர். தகுதிபெற்ற மாணவர்களில் 59 சதவீதம் பேர் நீட் கோச்சிங் செல்லாமல் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது பற்றிய புள்ளி விவரங்கள் மருத்துவ துறையில் உள்ளது. ஆனால் 99 சதவீதம் பேர் நீட் கோச்சிங் சென்றுதான் தகுதி பெற்றுள்ளனர் என திமுக பொய்யான தகவல்களை சொல்லி வருகிறது.

பொதுமக்களின் நலன்களை மறந்து பொய்யான தகவல்களை மூலதனமாக வைத்து திமுக அரசியல் நடத்தி வருகிறது. இதனை வீழ்த்தி பிரசாரம் செய்வோம். திமுகவின் பொய்களை தகர்த்தெறிவோம் என்றார்.

Source: Maalaimalar

Image Courtesy: One India Tamil

Tags:    

Similar News