உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்! - அண்ணாமலை!
பிரதமர் மோடியின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக பாஜக தொழில் பிரிவு சார்பில் சென்னை கமலாலயத்தில் 75 அங்குல அளவிலான தொடுதிரை டிஜிட்டல் டிவி அமைக்கப்பட்டது.;
பிரதமர் மோடியின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக பாஜக தொழில் பிரிவு சார்பில் சென்னை கமலாலயத்தில் 75 அங்குல அளவிலான தொடுதிரை டிஜிட்டல் டிவி அமைக்கப்பட்டது.
இதற்கான திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் பாஜக துணை தலைவர் எம்.என்.ராஜா மற்றும் அமைப்பு பொதுசெயலாளர் கேசவ விநாயகம், பொதுசெயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதன் பின்னர் தொடுதிரை டிஜிட்டல் டிவியின் செயல்பாட்டை கே.அண்ணாமலை தொடங்கி வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: டிஜிட்டல் டிவி மூலம், பிரதமர் மோடியின் (மன் கி பாத்) நிகழ்ச்சி மூலமாக அவரிடம் கலந்துரையாடுவது மட்டுமின்றி அவரிடம் பேசவும் முடிகிறது. நாட்டில் சமூக நீதியை பிரதமர் மோடி நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார். எங்கள் அனைவருக்கும் அவர்தான் சமூகநீதி காவலர் ஆவார்.
மேலும், மத்திய அரசு நிறைவேற்றி சட்டங்களுக்கு ஆதரவு வழங்கிய அதிமுகவுக்கு நாங்கள் நன்றி கடன் பட்டுள்ளோம். கூட்டணியில் விட்டு கொடுத்து செல்வோம். சுமூகமான முறையில் இடபங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, பாஜக மிகப்பெரிய வெற்றியை பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
Source: Maalaimalar
Image Courtesy:BJP