மணல் கொள்ளைக்காரர்களால் தொடரும் உயிரிழப்பு - சீறிய அண்ணாமலை
மணல் கொள்ளை கொள்ளைக்காரர்களால் தொடரும் உயிரிழப்புக்கு அரசு தான் பொறுப்பு என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
மணல் கொள்ளைகளை கொள்ளைக்காரர்களால் பறித்த குழியில் சிக்கி தொடரும் உயிரிழப்புக்கு தி.மு.க அரசை பொறுப்பு என்று தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். மேலும் அவர் வெளியிட்ட உள்ள அறிக்கையில் இது பற்றி மேலும் கூறுகையில், தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்று ஆறு பேர் மணல் கொள்ளைக்காரர்களால் பறித்த குழியில் மூழ்கி மாயமானதாகவும் அதில் இதுவரை மூவரின் சடலம் மீட்கப்பட்டதாகவும் வரும் செய்தி வேதனை அளிக்கிறது.
உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழக பா.ஜ.க சார்பில் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது திறன் எட்டு திமுக அரசின் ஒத்துழைப்போடு நடக்கும் மணல் கொள்ளை கொள்ளையால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இல்லை. ஜூன் மாதம் கடலூர் அருகே கொடிலம் ஆற்றில் குளிக்க சென்று ஏழு பேர் மணல் கொள்ளைக்காரர்களால் ஏற்படுத்தியுள்ள பள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சோகம் அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியது.
அதன் தொடர்ச்சியாக நடக்கும் இதுபோன்ற உயிரிழப்புகளுக்கு திறன் அற்ற தி.மு.க அரசை பொறுப்பு என்று தான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார். எனவே மணல் கொள்ளைக்காரர்களின் செயல்களை தடுக்க தி.மு.க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தற்போது கோரிக்கை வலுவாக அனைத்து திசைகளிலும் இருந்து வருகிறது.
Input & Image courtesy: Zee News