வெள்ளை அறிக்கை வெளியிட தி.மு.க'விற்கு தைரியம் இருக்கா? - அண்ணாமலை சவால் !

Breaking News.

Update: 2021-09-14 10:45 GMT

"தைரியமிருந்தால் நீட் தேர்வுக்கு முன்னால் தமிழக அரசு பள்ளியில் படித்த எத்தனை மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து உள்ளார்கள் என்பதை வெள்ளை அறிக்கையாக தி.மு.க வெளியிடுடட்டும்" என அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்தும், பள்ளி இறுதி தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேர்க்கை நடத்தப்படும் என அறிவித்தும், தி.மு.க அரசு நேற்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது, "தலைகீழாக நின்று எத்தனை தீர்மானங்கள் கொண்டு வந்தாலும் நீட்தேர்வு, விவசாய சட்டங்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மீது தி.மு.க அரசால் எதையும் செய்ய முடியாது என சவால் விடுத்தார். தொடர்ந்து பேசி அவர், தைரியமிருந்தால் நீட் விவகாரத்தில் 2006 -15 ஆம் ஆண்டு வரை நீட் தேர்வுக்கு முன்னால் தமிழக அரசு பள்ளியில் படித்த எத்தனை மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து உள்ளார்கள் என்பதை வெள்ளை அறிக்கையாக தாக்கல் செய்யுங்கள்" என சவால் விடுத்துள்ளார்.

Source - Asianet NEWS

Tags:    

Similar News