'இப்படி கர்ப்பிணிகளுக்கான திட்டத்துல காசு அடிக்கிறதுதான் திராவிட மாடலா?' - அண்ணாமலையின் சரவெடி

'திராவிட மாடல் ஆட்சியில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது' என அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-06-05 13:15 GMT

'திராவிட மாடல் ஆட்சியில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது' என அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை 11 மணியளவில் கமலாலயத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அண்ணாமலை இரண்டு தி.மு.க'வின் மிகப் பெரிய ஊழல்களை பட்டியலிட்டார் ஆதாரங்களுடன்.

அ.தி.மு.க காலத்தில் கொண்டுவரப்பட்ட கர்ப்பிணிகளுக்கான 'அம்மா நியூட்ரிஷன் கிட்' வெறுமனே 'நியூட்ரிசன் கிட்' என வழங்கப்படுகிறது அதில் இடம்பெற்றுள்ள தனியார் நிறுவன பொருளுக்குப் பதிலாக ஆவின் நிறுவனம் பொருள் பயன்படுத்தலாம் என துறை அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். இந்த கிட்'டில் உள்ள பொருள்களை வாங்குவதற்காக தனியார் நிறுவனத்திற்கு 450 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

இதில் 77 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது, கர்ப்பிணிகளுக்கான பொருளை வாங்குவதில் 77 கோடி ரூபாய் அநியாயமாக தி.மு.க ஊழல் செய்தது என குற்றம் சாட்டினார்.

மேலும் அவர் மற்றொரு குற்றச்சாட்டை G ஸ்கொயர் நிறுவனத்தின் மீது முன்வைத்தார், G ஸ்கொயர் முன்னேற்றக் கழகமாக சென்னை சி.எம்,டி.ஏ மாறி உள்ளது நிலத்தை பதிவு செய்வதற்காக குறைந்தபட்சம் 200 நாள் ஆகும் ஆனால் G ஸ்கொயர் கோவையில் 220 ஏக்கர்களுக்கான உரிமையை 8 நாளில் பெற்றுள்ளனர்.

ஜீ ஸ்கொயர் மற்றும் அதனைச் சார்ந்த நிறுவனங்களில் முறைகேடு நடந்துள்ளது இது தி.மு.க ஆதரவு நிறுவனம் என தெரிகிறது, பத்திர பதிவு செய்வதற்காகவே இணையதளத்தில் பத்திரப்பதிவு முறையீட்டில் குளறுபடி நடந்து வருகிறது இதனை வீட்டுவசதித் துறை அமைச்சர் விளக்கம் வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது 20ஆம் தேதிக்கு மேல் திமுகவின் ஊழல் சட்டமீறல்கள் செயல்பாடுகள் குறித்து புத்தகமாக ஆளுநரிடம் வழங்க உள்ளோம்' எனவும் கூறினார்.


Source - News 7 Tamil

Similar News