"பா.ஜ.க வை கொச்சைப்படுத்துபவர்களின் துரோகத்தைப் பட்டியலிட்டு பதிலடியை சம்மட்டி அடியாக கொடுப்போம்" - கர்ஜித்த அண்ணாமலை

எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழக பா.ஜ.க தலைவர்.

Update: 2021-08-06 00:15 GMT

"பா.ஜ.க-வைக் கொச்சைப்படுத்தினால் அவர்கள் செய்யும் துரோகத்தைப் பட்டியலிட்டு பதிலடியை சம்மட்டி அடிபோலக் கொடுப்போம்" என எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழக பா.ஜ.க தலைவர்.

மேக்கேதாட்டுவில் அணைகட்ட முயலும் கர்நாடக அரசைக் கண்டித்தும், அதைக் கைவிட வலியுறுத்தியும் தமிழக பா.ஜ.க சார்பில் தஞ்சாவூரில் பனகல் கட்டடம் எதிரே இன்று மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் பகுதியில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது.

பா.ஜ.க'வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியபோது, "தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனைக்காக மாதந்தோறும் ஆய்வுக் கூட்டத்தை நடத்தும் அரசு, விவசாயிகளுக்கு ஆதரவாக அவர்களுடைய திட்டங்களைச் செயல்படுத்துவது தொடர்பாக ஓர் ஆய்வுக் கூட்டத்தையாவது நடத்தியிருக்கிறார்களா? தமிழக முதல்வர் சாராயத்துறை அமைச்சரைத் தன் பக்கத்தில் வைத்துக்கொள்கிறார் ஆனால், விவசாயத்துறை அமைச்சரை தூரமாகவே வைத்திருக்கிறார். இதுவே தமிழக அரசின் செயல்பாடுகளை உணர்த்துவதற்கு ஒரு சான்று" என்றார்.

மேலும் பேசிய அவர், "காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் விவசாயிகளின் பட்டினிச் சாவு அதிகமாக நிகழ்ந்தது. ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, ஒரு விவசாயிகூட பட்டினியால் சாகவில்லை. இங்கு உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வந்திருக்கும் கூட்டம் பிரியாணிப் பொட்டலங்களுக்கும், டீ-சர்ட்டுக்காகவும் வரவில்லை. விவசாயிகளின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் அறப் போராட்டத்துக்காக வந்துள்ளனர். தமிழக அரசியலில் யாராவது பா.ஜ.க'வைக் கொச்சைப்படுத்தினால் விட மாட்டோம். மீறிப் பேசினால் அவர்களின் பிசினஸில், அடிப்படையில் கையைவைப்போம். அவர்கள் செய்யும் துரோகத்தைப் பட்டியலிட்டு பதிலடியை சம்மட்டி அடிபோலக் கொடுப்போம்" என்றார்.


Source - Junior Vikatan

Tags:    

Similar News