"அண்ணாமலைக்கு நல்ல மனசு" உளமாற பாராட்டிய தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன்.
அண்ணாமலைக்கு நல்ல மனசு;
தி.மு.க மற்றும் பா.ஜ.க இடையில் அரசியல் ரீதியாக மோதல்கள் இருந்தாலும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் சட்டமன்ற படத்திறப்பு விழாவில் எந்த ஒரு காழ்ப்புணர்ச்சியும் இன்றி கலந்துகொண்டதை தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் பாராட்டியுள்ளார்.
நேற்று சட்டசபையில் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் படத் திறப்புவிழா நடைபெற்றது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு திருவுருவ படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். இந்த விழாவில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு முதல் வரிசையில் அமர்ந்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வுக்கு பிறகு சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ'வும், தி.மு.க பொதுச்செயலாளருமான துரைமுருகன் கூறியதாவது, "பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை படத்திறப்பு விழாவில் கலந்துக்கொண்டதற்காக, அவரது நல்ல உள்ளத்தை பாராட்டுகிறேன்" என்றார்.
சிறு வயதில் மாநிலத்தலைவர் ஆனாலும் தொண்டர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் நல்ல பெயர் வாங்கிய அண்ணாமலை தற்பொழுது தமிழக அரசியலின் மூத்த தலைவர் துரைமுருகன் போன்றவர்களிடமும் நல்ல பெயர் வாங்கியது குறிப்பிடதக்கது.