தேவேந்திர குல வேளாளர் பற்றிய அறிவிப்பு! மோடியை புகழ்ந்து தள்ளிய டாக்டர் ராமதாஸ்!
தேவேந்திர குல வேளாளர் பற்றிய அறிவிப்பு! மோடியை புகழ்ந்து தள்ளிய டாக்டர் ராமதாஸ்!
பிரதமர் மோடி தமிழக வருகையின் போது தேவேந்திர குல வேளாளர் சமுதாய பண்பாடு குறித்து 10 நிமிடங்கள் பேசியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நீண்ட நெடுங்கலமாக தற்போது தாழ்த்தப்பட்டவர்களின் பட்டியலில் தனித்தனியாக உள்ள தேவேந்திர குலத்தான், கல்லாடி, பள்ளர், குடும்பன், கடையான், பண்ணாடி, வத்திரியன் உள்ளிட்ட 7 உட்பிரிவுகளை இணைத்து, ‘தேவேந்திர குல வேளாளர்’ என ஒரே பெயரில் அழைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது.
ஆனால் இந்த கோரிக்கையை நிறைவேற்ற தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகள் தயங்கி வந்தன. ஆனால் தமிழகம் வந்த பிரதமர் மோடி இதுகுறித்துப் பேசி 7 உட்பிரிவுகளை சேர்ந்தவர்கள் தேவேந்திர குல வேளாளர் என இனி அழைக்கப்படுவர் என பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், "பள்ளர், குடும்பன், காலாடி உள்ளிட்ட 7 சமுதாயங்களை #தேவேந்திரகுலவேளாளர் என்று அழைப்பதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் செய்திருப்பது குறித்தும், தேவேந்திர குல வேளாளர் சமுதாய பண்பாடு குறித்தும் சென்னை விழாவில் பிரதமர் மோடி 10 நிமிடங்கள் பேசியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!
தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தின் உரிமைகள், பெருமைகள் குறித்து எவரும் பேசுவதற்கு முன்பே நான் பேசியதும், வடக்கே வன்னியர்கள், தெற்கே தேவேந்திரர்கள் என்ற முழக்கத்துடன் 05.03.1989-இல் மதுரை தமுக்கம் திடலில் #ஒருதாய்மக்கள் மாநாட்டை நான் நடத்தியதும் என் மனதில் நிழலாடுகின்றன" என தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.