'அன்னைக்கு ஆற்காடு வீராசாமி, இன்னைக்கு செந்தில்பாலாஜி' - விஜயபாஸ்கர் ஏன் இப்படிக் கூறினார்?

'திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அன்றைக்கு ஒரு ஆற்காடு வீராசாமி இன்றைக்கு ஒரு செந்தில் பாலாஜி' என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

Update: 2022-05-02 10:45 GMT

'திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அன்றைக்கு ஒரு ஆற்காடு வீராசாமி இன்றைக்கு ஒரு செந்தில் பாலாஜி' என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சிவபதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்பொழுது பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும்பொழுது பகல் நேரத்தில் வறுத்தெடுக்கும் சூரியன் அதன் தாக்கம் இரவு நேரத்தில் தற்போது வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது, அதேபோல்தான் தமிழகத்தில் ஆட்சியும் மக்களை வாட்டி வருகிறது. தி.மு.க'காரர்களே தற்போது தமிழகத்தில் ஏன் இந்த ஆட்சி வந்தது என புலம்பும் அளவிற்கு இந்த ஆட்சி நடந்து வருகிறது. தி.மு.க ஆட்சி அனைத்துத் துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


நகை கடன் தள்ளுபடி முப்பத்தி ஆறு லட்சம் பேருக்கு என கூறிவிட்டு தற்போது யாருக்குமே தள்ளுபடி செய்யாமல் இருப்பதால் மக்கள் மிகப்பெரிய கோபத்துக்கு ஆளாகி உள்ளனர். முதல்வர் ஜெயலலிதாவால் துவங்கப்பட்ட ஏழை மக்கள் பயனடையும் திட்டம் அனைத்துமே இந்த ஆட்சியில் நிறுத்தப்பட்டு வருகிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அன்றைக்கு ஒரு ஆற்காடு வீராச்சாமி இன்றைக்கு ஒரு செந்தில்பாலாஜி என்பது போல் ஆகி உள்ளது, பதினோரு அரசு மருத்துவக்கல்லூரி கொண்டுவந்தது அ.தி.மு.க ஆட்சி.திராவிட மாடல் எனக்கூறிக்கொண்டு அ.தி.மு.க கொண்டு வந்த எந்த திட்டத்தையும் தாங்கள் கொண்டு வந்தது போல் சித்தரிப்பது எவ்விதத்தில் நியாயம் எனவும் கேள்வி எழுப்பினார் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.


Source - News 18 Tamil

Similar News