அ.தி.மு.க., பா.ஜ.க., கூட்டணியில் நாங்க இருக்கிறோமா.? பிரேமலதா விஜயகாந்த் என்ன சொல்கிறார்.!

அ.தி.மு.க., பா.ஜ.க., கூட்டணியில் நாங்க இருக்கிறோமா.? பிரேமலதா விஜயகாந்த் என்ன சொல்கிறார்.!

Update: 2020-11-27 19:10 GMT

நிவர் புயலால் சென்னையை அடுத்த செம்மஞ்சேரி பகுதியில் உள்ள 5000 மேற்பட்ட சுனாமி குடியிருப்புகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. குடியிருப்புகளை சுற்றி வெள்ள நீர் வடியாமல் அங்கேயே தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், செம்மஞ்சேரியில் உள்ள மக்களை தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்தார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நிவர் புயல் விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. இருப்பினும் தாழ்வான பகுதியாக உள்ள இந்த செம்மஞ்சேரியில் மழை பெய்யும் போது நீர் சூழ்ந்து கொள்கிறது. இதனை சரி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


மேலும், தற்போது வரை அ.தி.மு.க., பா.ஜ.க., கூட்டணியில் தே.மு.தி.க., தொடர்கிறது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு பற்றி ஜனவரி மாதம் பொதுக்குழு முடிவு செய்யும். கூட்டணி குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியிடுவார். இவ்வாறு அவர் பேசினார்.

Similar News