'நீங்க இந்துவா? கிறிஸ்துவரா திருமாவளவன் அவர்களே?' - இயக்குனர் பேரரசு சுளீர் கேள்வி

'திருமாவளவன் என்ன மதம்?' என திரைப்பட இயக்குனர் பேரரசு கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2022-10-15 11:23 GMT

'திருமாவளவன் என்ன மதம்?' என திரைப்பட இயக்குனர் பேரரசு கேள்வி எழுப்பி உள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இந்து சமய அறநிலையத்துறையை சைவம், வைணவம் என பிரிக்க வேண்டும் என கூறிய கருத்து சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து திரைப்பட இயக்குனர் பேரரசு கருத்து தெரிவித்துள்ளார்.

இயக்குனர் பேரரசு இதுகுறித்து கூறியதாவது, 'திருமாவளவன் கூறுவது போல் இந்து மதத்தை சைவம், வைணவம் என பிரித்துவிட்டு தமிழகத்தை சேர, சோழ, பாண்டிய நாடுகள் என பிரித்து விடுங்கள். மீண்டும் தெருப்பயர்களோடு ஜாதி பெயரும் சேர்த்து விடுங்கள்' என கூறினார்.

மேலும் பேசிய அவர், 'திருமாவளவனிடம் சுற்றிவளைத்து பேச விரும்பவில்லை நேரடியாக கேட்கிறேன் நீங்கள் இந்துவா? இல்லை என்றால் கிறிஸ்தவரா? இல்லையென்றால் எனக்கு எந்த மதமும் இல்லை என்றால் அதையும் வெளிப்படையாக சொல்லுங்கள். பிறகு இந்து மதத்தை ஆராய்ச்சி செய்வதும் கேலிக்கூத்து செய்வதும் இருக்கட்டும். நீங்கள் என்ன மதம் என்று தெரியாமல் இந்து மதத்தை இழிவு படுத்த கூடாது இதுவரை பொறுத்துக் கொண்டோம் இனி பொறுக்க மாட்டோம்' என கூறியுள்ளார்.


Source - Maalai malar

Similar News