கோயில் இடிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோர் கைது.!

கோவை, தடாகம் சாலையில் அமைந்துள்ள முத்தண்ணன் குளத்தின் கரையில் இருந்த பழமையான அங்காள பரமேஸ்வரி கோயில் உள்ளது. அந்த கோயில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக மாநகராட்சி அகற்றியுள்ளது.

Update: 2021-07-23 13:12 GMT

கோவையில், அங்காள பரமேஸ்வரி கோயிலை இடிக்கப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, தடாகம் சாலையில் அமைந்துள்ள முத்தண்ணன் குளத்தின் கரையில் இருந்த பழமையான அங்காள பரமேஸ்வரி கோயில் உள்ளது. அந்த கோயில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக மாநகராட்சி அகற்றியுள்ளது. 

கோயில் இடிப்பு சம்பவம் இந்து மக்களிடையே மிகப்பெரிய கோபத்தை உண்டாக்கியது. இதனை கண்டிக்கின்ற வகையில் இன்று இந்து மக்கள் கட்சி சார்பில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது கைது செய்வதற்கு முன்பாக அர்ஜூன் சம்பத் கூறும்போது, மீண்டும் இடித்த கோயிலை கட்டித்தர வேண்டும் எனக் கூறினார்.

Similar News