ராகுலுக்கு கருப்புக்கொடி - நள்ளிரவில் அர்ஜுன் சம்பத்தை கைது செய்த திமுக அரசு!

ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்க கருப்புக்கொடி காட்ட சென்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நள்ளிரவு கைது

Update: 2022-09-07 06:46 GMT

தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீரில் வரை இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் நடைப்பயணம் தொடங்க உள்ளார். இந்த தருணத்தில் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக குறிப்பாக கன்னியாகுமரியில் வருகை தந்த ராகுல் காந்திக்கு எதிராக 'கோ பேக் ராகுல்' என்ற பிரச்சாரத்தில் கருப்புக்கொடி காட்டுவதற்காக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்கள் நேற்று இரவு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு செல்வதற்காக ரயில் பயணம் மேற்கொண்டார்.


திடீரென எதிர்பாராத விதமாக நள்ளிரவு 12 மணி அளவில் திண்டுக்கல்லில் ரயிலில் பயணிக்கும் பொழுது வழியிலேயே காவல்துறையினர் இந்துக்களின் முதல்வர் தமிழ் திரு.அர்ஜுன் சம்பத் அவர்களை கைது செய்துள்ளனர். தி.மு.க அரசின் காவல்துறை நள்ளிரவில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் அர்ஜூன் சம்பத் அவர்கள் தூங்கி கொண்டு இருந்த போது எழுப்பி கைது செய்துள்ளதை தற்போது இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இந்து மக்கள் கட்சியின் சார்பில் இது பற்றி கூறுகையில், பிரதமர் மோடி ஒவ்வொரு முறையும் தமிழகம் வரும் போதும் 'கோ பேக் மோடி' டிரெண்ட் செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டை முன் வைத்தார்.



இந்த குற்றச்சாட்டில் கருப்புக்கொடி காட்டியவர்களுக்கு தி.மு.க ஆதரவாக இருந்தது. அவர்களை கைது செய்ய கூட அனுமதிக்கவில்லை. குறிப்பாக பிரதமர் முதல் கவர்னர் வரை அனைவருக்கும் கருப்புக்கொடி காட்ட தி.மு.கவிற்கு உரிமை உள்ளது. மற்ற கட்சிகள் கருப்புக்கொடி காட்டுவதற்கு உரிமை இல்லாத வகையில் தமிழகம் மாறி வருகின்றது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்கள். இதற்கு எதிராக தற்போது கண்டன ஆர்ப்பாட்டத்தையும் செய்ய உள்ளார்கள். இந்துக்களின் முதல்வர் அர்ஜூன்சம்பத் அவர்கள் கைது சம்பவத்தை கண்டித்து இன்று காலை 11.30 மணியளவில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் இந்து மக்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.

Input & Image courtesy: Twitter Source

Tags:    

Similar News