"ஜெருசிலம், ஹஜ் யாத்திரைக்கு மட்டும் உதவித்தொகையா ? ஏழை ஐயப்ப பக்தர்களுக்கும் உதவித்தொகை வழங்குக!" - அர்ஜூன் சம்பத்!
தமிழகத்தில் உள்ள ஏழை ஐயப்ப பக்தர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் வேண்டுகோள் வைத்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள ஏழை ஐயப்ப பக்தர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் வேண்டுகோள் வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுவாமியே சரணம் ஐயப்பா, ஐயனை தரிசிக்க தமிழகத்தில் இருந்து யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு இலவச பேருந்து வசதி வழங்கிட தமிழக அரசை வலியுறுத்தியுள், ஜெருசிலம், ஹஜ் யாத்திரைக்கு உதவித்தொகை வழங்குவது போல் ஏழை ஐயப்ப பக்தர்களுக்கு தமிழக அரசு வழங்கிட வேண்டும்.
இந்து மக்கள் கட்சி கோரிக்கை ஆர்ப்பாட்டம் அறிவிப்பு pic.twitter.com/OqcaktvZED
— Indu Makkal Katchi (Offl) 🇮🇳 (@Indumakalktchi) November 28, 2021
மேலும், சபரிமலையில் தமிழக அரசு சார்பில் இலவச தங்குமிடம், உணவு வசதி ஏற்பாடு செய்து தரக்கோரியும் நிலக்கல் பகுதியில் தமிழக அரசின் சார்பில் உதவி மையம் அமைத்திட வலியுறுத்தியும், ஐயனை தரிசிக்க யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்களுக்கு சுங்க கட்டணத்தை ரத்து செய்ய கோரிம், மத்திய அரசாங்கம் கொடுத்துள்ள வழிமுறைகளை பின்பற்றி கலியுகவரதனை தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்து மக்கள் கட்சியின் சார்பாகவும், ஐயப்ப பக்தர்களின் சார்பாகவும் முன் வைத்து தமிழகம் முழுவதும் சுங்க சாவடி முன் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மேலும், கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கம் தேவையற்ற விதிமுறைகளை தளர்த்தி ஐயப்ப பக்தர்களுக்கு ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்க வேண்டும். கோரிக்கை மனுவை சுங்க சாவடி அதிகாரி மூலமாக பாரத பிரதமர் தமிழக முதல்வர் நெடுஞ்சாலை துறைக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தி வருகின்ற டிசம்பர் மாதம் 3ம் தேதி தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Source, Image Courtesy: Twiter