கோவை மாநகராட்சியில் கவுன்சிலர்கள் பதவியேற்ற பின்னர் நடைபெற்ற முதல் கூட்டத்தில் அடிதடியுடன் தொடங்கியிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகராட்சியின் முதல் மாமன்றக் கூட்டம் இன்று (ஏப்ரல் 11) நடைபெற்றது. இதில் பொதுக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஏதேனும் திட்டங்கள் கிடைக்கலாம் என எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. கூட்டம் தொடங்கிய உடனேயே அதிமுக கவுன்சிலர்கள் சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து உடனடியாக திரும்பபெற வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தனர். இதனால் மாமன்றத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
மேலும், சொத்துவரி உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அதிமுக கவுன்சிலர்கள் கறுப்புச் சட்டை மற்றும் பதாகைகள் ஏந்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும், அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள்தான் கோவையில் தொடங்கி வைக்கப்படுகிறது என அதிமுகவினர் பேசினர். இதனால் திமுக கவுன்சிலர்கள் கூச்சல் குழப்பங்களை விளைவித்தனர். இதனால் அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் என்பவரை திமுகவினர் தள்ளிவிட்டு தாக்க முயற்சித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இதனால் கூச்சல், குழப்பங்களுடன் மாமன்றக் கூட்டத்தொடர் முடிவுற்றது.
Source, Image Courtesy: Vikatan