பரிசோதனையில் இறங்கும் அரவிந்த் கெஜ்ஜரிவால் - திங்கட்கிழமை நம்பிக்கை தீர்மானம்
டெல்லி சட்டப்பேரவையில் திங்கள் அன்று நம்பிக்கை தீர்மானம் நடத்த கெஜ்ஜரிவால் அரசு தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி சட்டப்பேரவையில் திங்கள் அன்று நம்பிக்கை தீர்மானம் நடத்த கெஜ்ஜரிவால் அரசு தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி சட்டப்பேரவையில் வரும் திங்கட்கிழமை அன்று நம்பிக்கை தீர்மானம் கொண்டு வரப்போறதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ஜரிவால் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர் எம்.எல்.ஏ'க்கள் யாரும் கட்சியிலிருந்து விலகவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வரப்படும் எனவும் அதற்கான சிறப்பு கூட்டத்தொடர் ஒரு நாள் நீடிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
கட்சி எம்.எல்.ஏ'க்கள் வேறு கட்சிக்கு தாவுகின்றனர் என்ற தகவலை எடுத்து முதல்வர் அரவிந்த் கெஜ்ஜரிவால் இந்த பரிசோதனையில் இறங்கியுள்ளார்.