ரியல் எதிர்கட்சியாக முழக்கமிட்டு நயினார் தலைமையில் வெளிநடப்பு செய்த பா.ஜ.க'வினர் - பின்தொடர்ந்த அ.தி.மு.க !

Assembly News.

Update: 2021-08-28 16:15 GMT

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டுமென தமிழக அரசு சட்டமன்றத்தில் கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க, அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் நடந்து வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் விவசாயிகளின் நலனுக்கு எதிராக உள்ள வேளாண் சட்டங்களை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தீர்மானங்களை இன்று அவையில் முன்மொழிந்தார். இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

இதனைதொடர்ந்து முதலில் பா.ஜ.க, பின்னர் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் என அடுத்தடுத்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த தீர்மானம் முன்மொழியப்பட்ட உடனேயே அதற்கு முதலில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்தே எதிர்ப்பு எழுந்தது. தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவாறே நயினார் நாகேந்திரன் தலைமையில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதனையடுத்து அ.தி.மு.க'வின் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.


Source - Asianet NEWS

Tags:    

Similar News