திராவிட மாடல் ஆட்சினா என்ன தெரியுமா? புதிய விளக்கம் கொடுத்த அமைச்சர் சேகர் பாபு!
முதலமைச்சரை பொறுத்தவரையில் ஆத்திகர் என்றும், நாத்திகர் என்றும் பிரித்து பார்ப்பதில்லை எனவும், அனைவரும் சமம்தான் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். மேலும், ஆத்திகர்களும், நாத்திகர்களும் ஒன்று சேர உருவாக்கிய ஆட்சிதான் இந்த திராவிட மாடல் ஆட்சி என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.
இது தொடர்பாக சென்னை, குன்றத்தூரில் பங்கேற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர் பாபு பேசியதாவது: இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தமிழக முதலமைச்சரை பொருத்தமட்டில், ஆத்திகர்கள், நாத்திகர்கள் என பிரிவினை கிடையாது என்றார்.
அது மட்டுமின்றி ஆத்திகர்களும், நாத்திகர்களும் ஒன்றுசேர உருவாக்கிய ஆட்சிதான் இந்த திராவிட மாடல் ஆட்சி என்பதில் எவ்வளவு கருத்து வேறுபாடு இல்லாதவர். தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் இது போன்று திராவிட மாடல், வளர்ச்சி என கூறி வருகின்றனர். ஆனால் தேர்தல் வாக்குறுதி அளித்ததில் இன்னும் நிறைவேற்றாமல் நூற்றுக்கணக்கானவை உள்ளது. இதனைதான் திராவிட மாடல் ஆட்சியா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source,Image Courtesyasianetnews