தி.மு.க. நிர்வாகி கொலை முயற்சி வழக்கு ! நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் !

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியில் கடந்த 2011ம் ஆண்டு முன்னாள் திமுக நகர செயலாளர் சுரேஷை கொலை முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் 4-வது நபராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சேர்க்கப்பட்டார்.

Update: 2021-08-11 11:59 GMT

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரில் கடந்த 2011ம் ஆண்டு முன்னாள் திமுக நகர செயலாளர் சுரேஷ் கொலை முயற்சி வழக்கில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார்.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியில் கடந்த 2011ம் ஆண்டு முன்னாள் திமுக நகர செயலாளர் சுரேஷை கொலை முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் 4வது நபராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சேர்க்கப்பட்டார். 


இந்நிலையில், இந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக இறுதி விசாரணைக்காக அனைவரும் ஆஜராகும்படி மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து இன்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆஜரானார். அவர் மட்டுமின்றி அதிமுக பிரமுகர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட வழக்கில் தொடர்புடைய 5 பேரில் 3 பேர் மாவட்ட நீதிபதி தங்க மாரியப்பன் முன்னிலையில் இன்று ஆஜரானார்கள்.

இந்த வழக்கில் அதிமுக, திமுக பிரமுகர்கள் ஒரே நேரத்தில் நீதிமன்றத்திற்கு வந்ததால், எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நீதிமன்றத்திற்கு வரும் அனைவரும் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வருகின்ற 19ம் தேதி மீண்டும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதிமுக, திமுக பிரமுகர்கள் நீதிமன்றத்திற்கு வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Source: Puthiyathalamurai

Image Courtesy: புதியதலைமுறை, Times Of India

https://www.puthiyathalaimurai.com/newsview/112615/Attempted-murder-case-of-DMK-leader-Minister-Anita-Radhakrishnan-in-court

Tags:    

Similar News