முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியில் முதலில் நெகிழியை தடை செய்யுங்கள்: உயர்நீதிமன்றம் நெத்தியடி!
நெகிழி பொருட்கள் மீதான தடை உத்தரவை முதலில் முதலமைச்சர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் அமல்படுத்தி, அதன் அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நெகிழி தொடர்பான மனு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மற்ற மாநிலங்களிலிருந்து நெகிழி பொருட்கள் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுவதாக நெகிழி உற்பத்தியாளர்கள் சார்பில் கூறப்பட்டது. அதற்கு நீதிபதிகள் நெகிழி மீதான தடை உத்தரவை அமல்படுத்துவது என்றால் அதன் உற்பத்தி வெளிமாநிலங்களில் இருந்து வருவதையும் தடை செய்ய வேண்டும்.
மேலும், பெரும்பாலான கடைகளில் இலவசமாக நெகிழி வழங்கப்படுகிறது. அதற்கு மாற்று ஏற்பாடு செய்வதற்கு கூடுதல் பணம் வசூல் செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் குற்றம்சாட்டினர். மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியான சென்னை, கொளத்தூரில் முதலில் நெகிழியை தடை செய்து அதற்கான அறிக்கையை தாக்கல் செய்யுங்கள் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Source: Puthiyathalaimurai
Image Courtesy: DNA India