காலையில் ஆட்களை கூட்டி போராடிவிட்டு, மாலையில் பி.டி.ஆர் வீட்டில் பம்மிய சரவணன் - பின்னணி என்ன?

காலையில் கொந்தளித்துவிட்டு பி.டி.ஆர்'ஐ சந்தித்தவுடன் டாக்டர் சரவணன் பம்மிய விவகாரம் அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-08-14 07:49 GMT

காலையில் கொந்தளித்துவிட்டு பி.டி.ஆர்'ஐ சந்தித்தவுடன் டாக்டர் சரவணன் பம்மிய விவகாரம் அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பா.ஜ.க'வினரை அவதூறாக பேசிய காரணத்தினால் பா.ஜ.க'வினர் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்து ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க'வினர் மதுரையில் ரயில் மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் நள்ளிரவில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வீட்டுக்கு சென்ற மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் சரவணன் அவரை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டதாகவும், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் 'பா.ஜ.க'வின் வெறுப்பு அரசியல் தனக்கு பிடிக்கவில்லை' எனக் கூறி பேட்டி அளித்தார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அப்படி என்ன சரவணனுக்கு பி.டி.ஆர்'ரை சந்தித்தபிறகு பா.ஜ.க'வின் அரசியல் பிடிக்காமல் போய்விட்டது என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் பி.டி.ஆர்'ரால் சரவணன் மிரட்டப்பட்டாரா என்ற சந்தேகமும் பரவலாக இருந்து வருகிறது.

Similar News