கோவாவில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரும் பா.ஜ.க.!

5 மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. அதில் உத்தரகண்ட், மணிப்பூர், கோவா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது.

Update: 2022-03-10 08:19 GMT

5 மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. அதில் உத்தரகண்ட், மணிப்பூர், கோவா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது.

இந்நிலையில், கோவா மாநிலத்தில் பாஜக தற்போது மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நிலை உருவாகியுள்ளது. மதியம் ஒரு மணி நிலவரப்படி 18 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 12 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 4 இடங்களிலும் மற்ற கட்சிகள் 6 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர்.

எனவே ஆட்சி அமைக்க 21 தொகுதிகள் இருந்தாலே போதுமானது. தற்போது பாஜகவிடம் 18 தொகுதிகள் உள்ளது. இன்னும் மூன்று தொகுதிகள் தேவை என்ற நிலை உள்ளது. இந்நிலையில், கோவா மாநில ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளையை பாஜக தலைவர்கள் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News