தளி, உதகை, விளவங்கோடு தொகுதி பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிவிப்பு.!

பாஜகவில் அறிவிக்கப்படாமல் இருந்த 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

Update: 2021-03-17 07:01 GMT

பாஜகவில் அறிவிக்கப்படாமல் இருந்த 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு 19ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்கப்பட்டிருந்தனர். தளி, விளவங்கோடு, உதகை உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தனர்.

இந்நிலையில், இன்று மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தளி - நாகேஷ்குமார்


 



உதகை - போஜராஜன்

விளவங்கோடு - ஆர்.ஜெயசீலன்

Similar News