மழை வெள்ளத்தில் தவித்தவர்களை படகு மூலம் மீட்ட பா.ஜ.க. மகளிர் அணி நிர்வாகி: இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான இடங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளிலும் மழைநீர் புகுந்துள்ளது.

Update: 2021-11-29 03:18 GMT

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான இடங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளிலும் மழைநீர் புகுந்துள்ளது.

அதே போன்று சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அது போன்றவர்களை தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் படகு மூலமாக மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து வருகின்றனர்.

அதே போன்று சென்னை கூடுவாஞ்சேரி, நந்திவரம் பகுதியில் பல்வேறு குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வந்த மக்களை பாஜக மகளிர் அணியை சேர்ந்த கலா அறிவுச்செல்வம் படகு மூலமாக மக்களை பாதுகாப்பாக அழைத்த வந்துள்ளார். இது பற்றிய புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் ரீட்விட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News