பா.ஜ.க - அ.தி.மு.கவுக்கு இடையே மோதல் உச்சம் என பொய் பரப்பும் கும்பல்: கொஞ்சம் கூட அசராத அண்ணாமலை!
பா.ஜ.கவிற்கும் அ.தி.மு.கவிற்கும் இடையே மோதல் உச்சமாக அதிகரித்து வருவதாக பொய் களை பரப்பும் கும்பல்.
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழகத்தில் பா.ஜ.க தலைவராக பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் வளர்ந்து வரும் மிகப்பெரிய கட்சியாக உருவாகி இருப்பதாக ஏற்கனவே ஆளும் கட்சியான தி.மு.க கூறிவந்தது. இந்நிலையில் கட்சியின் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்ற ஒரு நோக்கில் பொய்யான தகவல்கள் அதிகமாக பரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் அந்த கட்சியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் தொண்டர்கள் அதிர்ச்சியில் இருப்பதாகவும் பல்வேறு பொய்யான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக பா.ஜ.கவில் இருக்கும் நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வரும் ஒரு சூழ்நிலையில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் ஒப்புதலுடன் தான் மாவட்ட நிர்வாகிகளின் பதவி பறிக்கப்பட்ட வருவதாகவும் பெரும் பரபரப்பை அவர்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
கடந்த சில நாட்களாக பா.ஜ.க ஐ.டி விங் தலைவர் நிர்மல் குமார் பா.ஜ.கவை விட்டு பொறுப்பிலிருந்து விலகி அ.தி.மு.கவில் இணைந்து இருக்கிறார். மேலும் பா.ஜ.க ஐ.டி பிரிவு மாநில செயலாளர் திலிப் கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகளும் அ.தி.மு.கவில் இணைந்து இருக்கிறார்கள். இதன் காரணமாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாகவே கூட்டணி முடிவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தற்பொழுது பா.ஜ.க மற்றும் அ.தி.மு.கவின் மோதல்கள் உச்சமடைந்து இருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.
பா.ஜ.கவிற்கும், அ.தி.மு.கவிற்கு இடையில் சுமுகமான உறவு நிலைதான் வருகிறது. பாரதிய ஜனதா கட்சியின் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு தரப்பினர் தற்பொழுது இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்பி வருவதாகவும் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: Asianet News