கல்வான் தாக்குதலில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு அண்ணாமலை தலைமையில் வீட்டு மனை மனை வழங்கல் !
கல்வான் தாக்குதலில் உயிரிழந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முன் வீட்டு மனை பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் 20'க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் 40க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இந்த மோதலில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பழனி என்ற ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார்.இந்நிலையில் அவரது தியாகத்தை போற்றும் வகையில் அவரது குடும்பத்திற்கு சென்னையை சேர்ந்த ராணுவ வீரர் 2400 சதுர அடி கொண்ட வீட்டுமனை பட்டா வழங்கினார்.
அதற்கான நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு இறந்த ராணுவ வீரரின் மனைவிக்கு வீட்டு மனை பட்டா மற்றும் அதற்கான சொத்து ஆவணங்களை வழங்கினார்.