தி.மு.க.விற்கு வாக்களித்தால் கிராமத்தை காலி செய்யும் நிலை ஏற்படும்.. அரவக்குறிச்சி பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை.!

அரவக்குறிச்சி தொகுதிகுட்பட்ட, கா.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள கோடந்தூர், வெட்டுகட்டுவலசு, வடகரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பதற்காக சென்றார்.

Update: 2021-03-29 12:51 GMT

திமுகவினர் பொய்ப் பிரச்சாரத்தை நம்பி வாக்களித்தால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வீடுகள் அல்லது இரண்டு வீடுகள் மட்டுமே இருக்கும் என்று அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவர் தொகுதி முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு மக்களின் அன்பை பெற்று வருகிறார்.


 



இந்நிலையில், இன்று அரவக்குறிச்சி தொகுதிகுட்பட்ட, கா.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள கோடந்தூர், வெட்டுகட்டுவலசு, வடகரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பதற்காக சென்றார். அப்போது பெண்கள் அனைவரும் அண்ணாமலைக்கு ஆரத்தி எடுத்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

இதனிடையே அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது: நான் ஒரு விவசாயி, உங்கள் பகுதியை சேர்ந்தவன். உங்களிடம் உறுதியாக ஒன்று சொல்கிறேன். வரும் தேர்தலில் திமுகவிற்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தால், கோமணம் கட்டும் நிலைமை விவசாயிகளுக்கு ஏற்படும்.




 


மேலும், சட்டமன்ற உறுப்பினரின் பணி என்னவென்றால், 5 வருடங்களுக்கு நிதிகளைக் எங்கிருந்து கொண்டு வரவேண்டும். தண்ணீர் எப்படி கொண்டு வரவேண்டும். விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் எப்படி கொண்டுவர வேண்டும், சாலை வசதி போன்றவைதான் சட்டமன்ற உறுப்பினரின் பணியாகும்.




 


தற்போது கரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக செந்தில்பாலாஜி கரூர் மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறார். எனவே இந்த முறை மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். திமுகவினர் பொய்ப் பிரச்சாரத்தை நம்பி வாக்களித்தால் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு ஊருக்கு இரண்டு வீடுகள் மட்டுமே இருக்கும். ஏனென்றால் அனைவரும் இந்த ஊரை காலி செய்து விட்டு சென்று போய்விடுவார்கள்.

வரும் தேர்தலில் தாமரை சின்னத்திற்கு வாக்களித்து, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வாய்ப்பு வழங்குங்கள் என கூறினார்.

Similar News