மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பா.ஜ.க. தலைவர் சாமி தரிசனம்.!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பா.ஜ.க. தலைவர் சாமி தரிசனம்.!

Update: 2021-01-30 10:29 GMT

தமிழக சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்காக பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா நேற்று இரவு மதுரை வந்தார். இன்று காலை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயிலில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மதுரைக்கு நேற்று இரவு விமானம் மூலமாக ஜே.பி.நட்டா வந்திருந்தார். அவரை தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் மற்றும் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் வரவேற்றனர். இதனை தொடர்ந்து விடுதியில் ஓய்வெடுத்தார்.

இந்நிலையில், ஜே.பி.நட்டா இன்று காலை 8.30 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தார். அவருக்கு கோயிலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். சாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதன் பின்னர் மாலை முக்கிய நிர்வாகிகளை சந்தித்து சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
 

Similar News