பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு கடற்கரையை தூய்மைப்படுத்திய தமிழக பா.ஜ.க !

பிரதமர் மோடியின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, பெசன்ட்நகர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை உட்பட பலர் ஈடுபட்டனர்.

Update: 2021-09-17 07:17 GMT

பிரதமர் மோடியின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, பெசன்ட்நகர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை உட்பட பலர் ஈடுபட்டனர்.

இந்த பணியில் தமிழக பாஜக நிர்வாகிகள் பலர் ஈடுபட்டனர். கடற்கரையில் குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றினர். இதனை தொடர்ந்து பாஜக கொடியேற்றிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேக் வெட்டி, இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்.

இதே போன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி பாஜகவினர் பிரதமர் மோடியின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Tags:    

Similar News